Connect with us

டி.வி

தாலியை கழற்றிய அக்கா: தங்கைக்கு கட்ட துரத்தும் மாப்பிள்ளை: இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

Published

on

anna smj

Loading

தாலியை கழற்றிய அக்கா: தங்கைக்கு கட்ட துரத்தும் மாப்பிள்ளை: இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

அம்மா வீட்டுக்கு கிளம்பும் அஞ்சலி.. துளசி மீது காதலா? வெற்றியின் அம்மாவுக்கு வரும் சந்தேகம் – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் துளசியை மிரட்டிய ஜெகனுக்கு வெற்றி வார்னிங் கொடுத்து அனுப்பிய நிலையில் இன்று அஞ்சலி சூட் கேஸில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க மகேஷ் எதுக்கு துணி எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்க என்று கேட்கிறான். எனக்கு காலேஜ்ல எக்ஸாம் இருக்கு நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் எங்க அம்மா வீட்ல இருந்து காலேஜ் பக்கம் அதனால நாங்க போய் தங்கி இருக்கேன் என்று சொல்ல மகேஷ் டென்ஷன் ஆகிறான். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளிக்கிறான்.மேலும் அஞ்சலி என் அம்மா வீட்டுல என்னை எல்லாரும் நல்லா பாத்துப்பாங்க, பாலமுருகன் அண்ணாவும் நல்லா பார்த்து பாரு என்று சொல்ல மகேஷ்க்கு பழைய நினைவுகள் வந்து செல்கின்றன. பிறகு மகேஷ் இப்ப நீ படுத்து தூங்கு காலையில எழுந்து படித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறான். மறுபக்கம் வெற்றியின் வீட்டிற்கு ஜோதிடர் ஒருவர் வர அவனது அம்மா வெற்றியின் ஜாதகத்தை கொடுத்து அவனுக்கு ஏதாவது தோஷம் இருக்கானே பாருங்க பரிகாரம் ஏதாவது செய்யணும் ஆமென் பார்த்து சொல்லுங்க என்று கேட்கிறாள்.ஜோசியர் வெற்றிக்கு ஏதோ ஒரு பொண்ணு சூனியம் வைத்திருப்பதாக சொல்ல வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அந்த பெண்ணை கண்டபடி திட்ட வெற்றி துளசியை திட்டுறாங்களே என்று வருந்துகிறான். அதை நேரத்தில் வெற்றி ஒருவேளை துளசியை காதலிக்கிறானோ என அவனது அம்மாவுக்கு சந்தேகம் எழுகிறது. அடுத்த நாள் காலையில் அஞ்சலி லேட்டாக எழ மகேஷ் உடன் காலையில படிக்கணும்னு சொன்னேன்ல எழுப்பி இருக்கலாமே என்று கேள்வி கேட்க நீ ரொம்ப அழகா தூங்கிட்டு இருந்த, உன்னை எப்படி அஞ்சலி எழுப்ப முடியும் என்று ரொமான்டிக்காக பேசுகிறான்.இந்த பக்கம், துளசி தியாவுடன் வெற்றியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். டாக்டரை பார்த்து பேசப்போன துளசி தியாவிடம் யார்கிட்டயும் பேசக்கூடாது என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள். வெற்றி தியாவிடம் உனக்கும் அடிபட்டிருக்கு எனக்கும் அடிபட்டிருக்கு என்று சொல்கிறான். பிறகு தியா உங்களுக்கு அடிபட்டு இருக்கிறது சீக்கிரம் சரியாகிவிடும்.. ஆனா எனக்கு எப்போ சரியாகும் என்று தெரியல சொல்ல வெற்றி நான் துளசி அம்மா என எல்லோரும்  இருக்கோம்ல உனக்கு சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்கிறான்.மறுபக்கம் சிவராமன் ஆபீஸ் வர அவரிடம் மேனேஜர் இனி நீங்க அட்வான்ஸ் எல்லாம் வாங்க முடியாது உங்களுடைய சர்வீஸ் மூடிய இன்னும் இரண்டு மாதம்தான் இருக்கு என அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கல்யாணத்தில் உருவாகும் அடுத்த குழப்பம்.. திடீர் என்ட்ரி கொடுக்கும் வில்லன் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கார்த்திக், ரேவதி திருமணத்தில் குழந்தை தீபா ரேவதியை அம்மா என கூப்பிட்ட நிலையில் இன்று, யார் அந்த குழந்தை என எல்லாரும் ரேவதியை விசாரிக்க அவள் அது என்னுடைய தோழியோட குழந்தை. ஆசிரமத்தில் வைத்து நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாள்.இதனை தொடர்ந்து கார்த்திக், ரேவதி கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்குகிறது. ராஜசேதுபதி ஊரில் இருக்கும் விருமனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. உடனே அவன் நான் போய் உண்மையை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன் என்று கிளம்பி வருகிறான். அடுத்ததாக விருமன் மண்டபத்திற்கு வருகிறான். சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல போவதாக அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் மயில்வாகனம் விருமனை கட்டையால் அடித்து மயங்க வைக்கிறான்.இப்படி திரும்ப திரும்ப உண்மையை சொல்ல விருமன் முயற்சி செய்கிறான், இப்டியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தாலியை கழட்டி எறிந்த ரத்னா.. வீராவை மனைவியாக்க துடிக்கும் வெங்கடேஷ் – எதிர்பாராத திருப்பங்களுடன் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரத்னா பஞ்சாயத்தில் வைத்து தனக்கு வெங்கடேஷிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று, ரத்னா இவனோட எல்லாம் எந்த பொண்ணும் வாழ முடியாது என்று ரத்னா தனது தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசி எறிகிறாள், வெங்கடேஷ் அவமானப்பட்டு நிற்கிறான்.சண்முகம் துணிச்சலாக தனது தங்கை எடுத்த முடிவை பாராட்டி அவளை தனது வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். மறுபக்கம் இசக்கி மற்றும் வீரா என இருவரும் கோவிலில் அக்காவுக்கு எப்படியும் நல்ல தீர்ப்பு தான் வந்திருக்கும் என்று கடவுளை வேண்டுகின்றனர். அக்காவுக்கு திருஷ்டி சுத்தி போட்டு வீட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டும். நல்ல வாழ்க்கை அமையனும் என பேசி கொள்கின்றனர்.அடுத்து வெங்கடேஷின் அப்பா அம்மா அவ வேண்டாம்னு ஆரம்பத்தில் இருந்தே சொன்னோம்.. கேட்டியா? ஒரு பொம்பள அவளே நீ வேணான்னு போகும் போது உனக்கு ஒரு பொண்ணு கிடைக்காமலா போய்டும்.. வா நாங்க உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று சொல்கின்றனர். மேலும் கோவிலுக்கு அழைத்து வந்து தலை மூழ்க சொல்கின்றனர். இதை பார்த்த இசக்கி மற்றும் வீரா என்ன எங்க அக்கா தாலியை கழட்டி மூஞ்சில் எறிந்தாளா என்று பேசி நக்கல் அடிக்க வெங்கடேஷ் மேலும் கடுப்பாகிறான்.உங்க அக்கா தாலியை கழட்டி போட்டா என்ன நீ இன்னும் கல்யாணம் ஆகாமல் தானே இருக்க என்று வீரா கழுத்தில் தாலி கட்ட செல்ல இசக்கி அதிர்ச்சி அடைகிறாள். வெங்கடேஷை பிடித்து தள்ளி விடுகிறாள். ஆனால் அவன் வீரா கழுத்தில் தாலியை கட்ட அவளை துரத்தி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன