சினிமா

நான் அதற்கு மட்டும் தான் லாயக்கு.. நடிகை அனுஷ்கா பேச்சால் பரபரப்பு

Published

on

நான் அதற்கு மட்டும் தான் லாயக்கு.. நடிகை அனுஷ்கா பேச்சால் பரபரப்பு

நடிகை அனுஷ்கா, அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு இணையாக நடிகைகளாலும் படங்கள் நடிக்க முடியும் என்று சாதித்து காட்டியவர்.பாக்ஸ் ஆபிஸ் படங்கள் கொடுத்து நிரூபித்தார். அவருக்கு பிறகு நிறைய நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தைரியமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்கள்.புகழின் உச்சத்தில் வலம் வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்திற்காக உடல் எடையை கூட்டி நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின் உடல் எடையை குறைக்க முடியாமல் சினிமாவில் இருந்து விலகி இருந்த அனுஷ்கா தற்போது மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.இந்நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் அனுஷ்கா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” அருந்ததி படத்தில் நான் கமிட்டான போது எதற்காக அனுஷ்காவை தேர்ந்தெடுக்கிறீர்கள் அவர் கவர்ச்சிக்கு மட்டும் தான் லாயக்கு என்று கூறினார்கள்.ஆனால் இயக்குநர் ஷ்யாம் பிரசாத் ரெட்டியோ என்னை முழுமையாக நம்பினார். அருந்ததி படத்திற்கு முன் வரை எனக்கு நடிப்பு என்றால் என்ன என்று முழுமையாக தெரியாது. இயக்குநர் கூறுவதை அப்படியே காப்பி அடிப்பேன். சொந்தமாக நடிக்க தெரியாமல் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.      

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version