பொழுதுபோக்கு
போர்னு வந்துட்டா உயிராவது… கார்த்தியுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா; சர்தார் 2 டீசர் வைரல்!

போர்னு வந்துட்டா உயிராவது… கார்த்தியுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா; சர்தார் 2 டீசர் வைரல்!
கமல்ஹாசன், விஜய், மகேஷ்பாபு, உள்ளிட்ட பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா சர்தார் 2 படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லனாக மாறியுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில், கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் சர்தார். ஸ்பை த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் ராஷிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தண்ணீரில் நடக்கும் அரசியல் குறித்தும், இந்தியாவிற்கு வரும் ஆபத்து குறித்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ராஷிஷா விஜயனுடன், யோகி பாபு, மாளவிகா மோகன் ஆகியோருடன் வில்லனாக எஸ்.ஜே.சூர்யர் நடித்துள்ளார். சர்தார் 2 படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில், உங்கள் பூர்வீக நிலத்தை நோக்கி ஒரு பெரிய வெள்ளம் வருகிறது! ஒரு பெரிய போர் வெடிக்கப் போகிறது என்று சர்தார் (கார்த்தி) எச்சரிக்கப்படுகிறார்.இந்த அழிவு சக்தி யார் என்று நீங்கள் கேட்கிறீர்களா? பிளாக் டாகர் (எஸ்.ஜே. சூர்யா). இருப்பினும், போர் தொடங்கியதும், சர்தாருக்கு ஒரே ஒரு அணுகுமுறை மட்டுமே உள்ளது: “உயிர்களையே வதைப்பது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 177 வினாடிகள் கொண்ட இந்த டீசரில், ஜப்பானில் உள்ள ஒரு ஒதுக்குப்புற மடாலயம் பனியில் குளித்திருக்கும் வான்வழி ஷாட்டுடன் தொடங்குகிறது. விரைவில், வீரர்கள் அந்தப் பகுதிக்கு வந்து கட்டிடத்தின் கதவை உடைக்க முயற்சிக்கிறார்கள்.அவர்களின் முயற்சிகள் முன்னேறும்போது, டீசர் மடாலயத்திற்குள் காட்சிகளுக்கு மாறுகிறது, அங்கு ஆயுதம் ஏந்திய ஒரு குழுவை ஒரு வயதானவர் அடித்து நொறுக்குகிறார். அந்த மனிதன் வேறு யாருமல்ல சர்தார் என்பது அடுத்தா ஃபிரேமில் காட்டப்படுகிறது. அடிக்க வந்த கும்பலின் தலைவன் செங்கை நேருக்கு நேர் சந்திக்கும்போது, விஷயங்கள் தெளிவாகின்றன, இந்த முறை சர்தாரின் நோக்கம் – மோசமான பிளாக் டாகரை எதிர்கொள்வது. ஆனால் தனது முகத்தில் ஒரு துளியும் பயத்தை காட்டாத சர்தார், போதுமான தகவல்களைச் சேகரித்தவுடன் செங்கைக் சொன்றுவிட்டு, வீரர்கள் வருவதற்குள், சர்தார் தனது பணியை முடித்துவிட்டு ஒரு தடயமும் இல்லாமல் சென்றுவிடுகிறார்.இதன் மூலம் சர்தார் எவ்வளவு திறமையானவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இறுதியாக எங்க ஊர் பக்கம் ஒன்னு சொல்லுவாங்க, போர்னு வந்ததுக்கு அப்புறம் உயிராவது… என்று சொல்லிவிட்டு செங்கை கொன்றுவிடுகிறார். இந்த டீசர் தஙற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பதிப்பைத் தவிர, படம் தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.