பொழுதுபோக்கு
வீடியோ வைரல்: சீரியல் நடிகை போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்

வீடியோ வைரல்: சீரியல் நடிகை போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் வித்யா கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். சமீபத்தில், இவரின் ஆபாச வீடியோ என்று ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், இது உண்மை கிடையாது ஏ.ஐ வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்திருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “வீடியோவுக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் ஆண் குறித்து யாருமே கேள்வி கேட்கவில்லை.வீடியோவை பகிர்ந்தவர்கள், அதனால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பை சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. ஒரு பெண்ணை உடல் மனம், உணர்வு ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.