விளையாட்டு
MI vs KKR Live Score: வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!

MI vs KKR Live Score: வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, MI vs KKR Live Cricket Score Updatesஇதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வி, ஒன்றில் வெற்றி பெற்ற கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி அதன் கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி உற்சாகத்துடன் களமாடும். மறுபுறம், இதுவரை ஆடிய 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ள மும்பை அதிலிருந்து மீள போராடும். சொந்த மைதானத்தில் ஆடுவதால், வெற்றிக் கணக்கை தொடங்க கடுமையாக முயற்சிக்கும். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 34 போட்டிகளில், கொல்கத்தா 11 போட்டிகளில் வென்றுள்ளது, மும்பை அணி 23 முறை வெற்றி பெற்றுள்ளது.