தொழில்நுட்பம்
Oppo Smartphone: ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் 50 எம்.பி கேமரா, 7000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன்; எந்த மாடல் தெரியுமா?

Oppo Smartphone: ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் 50 எம்.பி கேமரா, 7000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன்; எந்த மாடல் தெரியுமா?
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஒப்போவும் இடம்பெறும். அதன்படி, ஒப்போ நிறுவனத்தின் புகழ்பெற்ற கே சிரீஸ் மாடல் ஸ்மார்ட்போன்களில் புதிதாக மூன்று போன்கள் களமிறங்க இருக்கின்றன.ஒப்போ கே13 (Oppo K13), ஒப்போ கே13 ப்ரோ (Oppo K13 Pro) மற்றும் ஒப்போ கே13எக்ஸ் (Oppo K13x) ஆகிய மாடல்களை அந்நிறுவனம் விரைவில் சந்தையில் களமிறக்க இருப்பதாக கூறப்படுகிறது.அந்த வகையில், இந்த போன்களில் நாம் எதிர்பார்க்கக் கூடிய சில சிறப்பம்சங்கள் அடங்கிய பட்டியல் இணையத்தில் உலா வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாக இந்தக் குறிப்பில் நாம் பார்க்கலாம். ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகம் 6 ஜென் 4 சிப்செட் இயங்குதளம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்துடன் FHD+ ரெசல்யூஷன் கொண்ட 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மிக முக்கியமான வகையில் 7,000mAh பேட்டரி திறன் இருக்கலாம் என்று தொழில்நுட்பதுறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படலாம். கேமரா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக 50MP + 2MP என பின்புறத்தில் டுயல் கேமரா இருக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமரா இடம்பெறக் கூடும். இதுமட்டுமின்றி இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த போனில் இடம்பெறலாம்.மற்றொரு புறம், கே13 ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 8400 சிப்செட் இயங்குதளமும், கே13 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகம் 8எஸ் ஜென் 4 சிப்செட் இயங்குதளமும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் சீனாவில் விரைவில் வெளியாகக் கூடும் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியாவில் இது எப்போது களமிறங்கும் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.எனினும், இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை விவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 14,990-க்கும், ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் ரூ. 24,990-க்கும் மற்றும் கே13 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990-க்கும் விற்பனை செய்யப்படலாம்.மற்ற நிறுவனங்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதத்தில் மோட்டோ எட்ஜ் 60 பியூஷன் (Moto Edge 60 Fusion) இந்தியாவிலும், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra) சீனாவிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) இந்தியாவிலும், சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) இந்தியாவிலும் விற்பனைக்கு வரக் கூடும்.மேலும், விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) மற்றும் விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்த ஏப்ரலில் சீனாவில் விற்பனையைத் தொடங்கக் கூடும்.ரியல்மி நிறுவனத்தின் 14டி (Realme 14T) மற்றும் சி75எக்ஸ் (Realme C75x) ஆகிய இரு மாடல்களும் உடனடியாக விற்பனையை தொடங்கலாம்.