உலகம்
அமெரிக்க உப ஜனாதிபதிக்கு டென்மார்க் கண்டனம்!

அமெரிக்க உப ஜனாதிபதிக்கு டென்மார்க் கண்டனம்!
டென்மார்க் மற்றும் கிறீன்லாந்தை அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வாக்ஸ் விமர்சித்தமைக்கு டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘எமது நாடு ஏற்கனவே ஆர்க்டிக் பாதுகாப்பில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவுடன் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளது. என்றாலும் நாம் குற்றச்சாட்டுக்கும், விமர்சனங்களுக்கும் பயந்தவர்கள் அல்லர். டென்மார்க்கும் அமெரிக்காவும் இன்னும் நெருங்கிய கூட்டாளிகளாக இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
உப ஜனாதிபதி ஜே.டி வானஸ் உள்ளிட்ட ட்ரம்ப் நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வெள்ளியன்று கிறீன்லாந்துக்கு விஜயம் செய்தனர். இச்சமயம் ஜே.டி. வான்ஸ், கிறீன்லாந்தின் பாதுகாப்பில் டென்மார்க் குறைவாகவே முதலீடு செய்துள்ளது. அதனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் டென்மார்க் அதன் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்றுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பிலேயே டென்மார்க் வெளியுறவு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் வான்ஸ் மேலும் குறிப்பிடுகையில், டென்மார்க்கிற்கு எங்கள் செய்தி மிகவும் சாதாரணமானது. நீங்கள் கிறீன்லாந்து மக்களுக்கு சிறந்த பணிகளைச் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.