இலங்கை
இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை 299 ரூபாயாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை 361 ரூபாயாகும்.
ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த விலை குறைப்பு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டது.