இலங்கை
இலங்கை IOC எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை IOC எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கை IOC நிறுவனம், , நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை திருத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை மாற்றத்தின் படி, 92 ஆக்டேன் பேட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய விலை ரூ. 299 ஆக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், 95 ஆக்டேன் பேட்ரோல் லிட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 361 ஆக மாற்றப்பட்டுள்ளது.
எனினும் , மற்ற எரிபொருள் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.