இலங்கை
கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை இந்துப் பீடத்துக்குத் தருக

கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை இந்துப் பீடத்துக்குத் தருக
கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்துக்கு வழங்க வேண்டும் என்று இலங்கை சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அண்மையில் கோரப்பட்ட பகிரங்க முன்மொழிவைத் தொடர்ந்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சைவமாகா சபையின் தீர்மானம் உபவேந்தர் ஊடாக ஆளுநருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.