பொழுதுபோக்கு
குட் பேட் அக்லி, கேங்கர்ஸ்… ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் முக்கிய தமிழ் படங்கள்

குட் பேட் அக்லி, கேங்கர்ஸ்… ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் முக்கிய தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 100-க்கு அதிகமான திரைப்படங்கள் வெளியானாலும், விடுமுறை மாதம் என்று சொல்லப்படும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் வெளியாகும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டெஸ்ட். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மீர ஜாஸ்மின், காளி வெங்கட், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 4-ந் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற, இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துளளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில், த்ரிஷா, பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தமிழ் சினிமாவில் காமெடி இயக்குனர் என்று பெயரேடுத்த இயக்குனர் சுந்தர்.சி சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்துள்ள படம் கேங்கர்ஸ். கேத்ரின் தெரசா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லே, மைம் கோபி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுந்தர்.சி வடிவேலு கூட்டணியில் ஏற்கனவே வெளியான பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.