Connect with us

உலகம்

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ‘ஜிப்லி’!

Published

on

Loading

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ‘ஜிப்லி’!

கடந்த சில நாட்களாக நீங்கள் சமூக ஊடகங்களில், மேலுள்ள படத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான கார்ட்டூன் படங்களை பார்த்திருப்பீர்கள்.

சமூக ஊடக பயனர்கள், தங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களைக் கொண்டு இது போன்ற கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

இது சமூக ஊடகங்களில் ‘ஜிப்லி ஆர்ட்’ என்ற பெயரில் டிரெண்டாக மாறியது.

ஜிப்லி என்றால் என்ன? இதனை உருவாக்கியவர் யார்? இது ஏன் திடீரென இணையத்தில் பிரபலமானது?

ஜிப்லி என்றால் என்ன?

Advertisement

1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் ஜப்பான் நாட்டில் ‘ஸ்டூடியோ ஜிப்லி’ என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப்படைப்புகளை ‘ஜிப்லி’ படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்

ஜப்பான் மக்களின் இயல்பான தினசரி வாழ்க்கை முறையை மிகவும் நுணுக்கமாக, கையால் வரையப்பட்ட ஜிப்லி படங்கள் காட்டின. இந்த படங்கள் திரைப்படங்களுக்கு ஒரு புதுவிதமான அழகைத் தந்தன.

Advertisement

மேலும் இந்த படங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் கதையின் உணர்வை வெளிப்படுத்தவும், கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கவும் உதவியதால் பெருவாரியான மக்களுக்கு இந்த ஜிப்லி படங்கள் சென்றடைந்தன.

மை நெய்பர் டோடோரோ, பிரின்சஸ் மோனோனோகே, ஸ்பிரிட்டட் அவே ஆகியவை ‘ஸ்டூடியோ ஜிப்லி’ யின் பிரபலமான அனிமேஷன் திரைப்படங்கள் ஆகும்.

இந்த ஜிப்லி முறையானது அனிமேஷன் திரைப்பட துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அனிமேஷன் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஜிப்லி முறையை தங்களது படைப்புகளில் பயன்படுத்தியுள்ளனர்.

Advertisement

திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை ஜிப்லி முறையில் உருவாக்கப்பட்டன.

தற்போது ஏன் பிரபலமானது?

சுமார் 40 ஆண்டு காலமாக இருந்து வரும் இந்த ஜிப்லி முறை தற்போது திடீரென ஏன் பிரபலமானது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு காரணம் Chat GPT.

Advertisement

chatGPT புதிதாக ஒரு அப்டேட் (gpt-4o) கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஒரு பயனர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை அனிமேஷன் பாணியில் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

தனிநபர் சமூக ஊடக பயனார்களைத் தாண்டி, எடப்பாடி பழனிசாமி முதல் சச்சின் டெண்டுல்கர் வரையிலான பிரபலங்களும் தங்களது ஜிப்லி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில நிறுவனங்களும் இந்த முறையை தங்களது விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன.

Advertisement

இந்த புது அப்டேட்டின் செயல்பாட்டில் உள்ள எளிமையும், பயனர்களுக்கு வசதியான அணுகல்தன்மையும் இது இவ்வளவு விரைவாக பிரபலமாவதற்கான காரணம் ஆகும்.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய ஜிப்லி புகைப்படங்கள் மக்கள் மத்தியில் சென்றடைந்ததால், அதிக அளவில் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இதனால் chatGPT இன் பணிச்சுமை அதிகமாகியுள்ளது என அதனை உருவாக்கியுள்ள ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள கணக்கின் முகப்பு படத்தில் கூட ஜிப்லி படத்தையே வைத்துள்ளார்

“chatGPT மூலம் மக்கள் இதுபோன்ற படங்களை உருவாக்குவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் GPU-க்கள் (கிராஃபிக்ஸ் கார்டுகள்) அதிக சூடாகி உருகும் நிலையில் உள்ளன. எனவே இந்த செயல்பாட்டை இன்னும் மேம்பட்ட முறையில் மாற்றும் வரை சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளோம்”, என்று சாம் ஆல்ட்மன் மார்ச் 27ஆம் திகதி அன்று எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இதன் பிறகு chatGPTயானது, அதன் இலவச பயனர்களுக்கு 1 நாளைக்கு 3 ஜிப்லி படங்களை உருவாக்கவே அனுமதியளிக்கிறது.

ஆனாலும் மக்கள் அதிக அளவில் இதனை பயன்படுத்தி வந்ததால் சாம் ஆல்ட்மன், “தயவுசெய்து, படங்கள் உருவாக்குவதை கொஞ்சம் குறைக்கவும். இது மிகவும் அதிக அளவில் இருக்கிறது”, என்று நேற்று முன்தினம் (30) எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன