உலகம்
செஞ்சிலுவை சங்கத்திற்கு கருப்பு தினம்!

செஞ்சிலுவை சங்கத்திற்கு கருப்பு தினம்!
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்கள் 8 பேர் காஷாவின் ரபாஹ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 23ம் திகதி இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்த செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக அல் ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மற்றுமொரு உறுப்பினர் காணாமல் போயுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.