பொழுதுபோக்கு
சைக்கோ கணவன் என்ட்ரி: அப்பாவுக்கு வார்னிங் கொடுத்த மகன்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

சைக்கோ கணவன் என்ட்ரி: அப்பாவுக்கு வார்னிங் கொடுத்த மகன்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!
சிக்கிக் கொண்ட சௌந்தரபாண்டி.. அப்பாவை எதிர்த்து முத்துப்பாண்டி கொடுத்த வார்னிங் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் வீராவின் கழுத்தில் தாலி கட்ட சென்ற நிலையில் இன்று, வெங்கடேஷ் வீராவை துரத்திக் கொண்டு ஓட சரியான நேரத்தில் அங்கு வந்த முத்துப்பாண்டி அவனிடம் இருந்து வீராவை காப்பாற்றுகிறான். பிறகு முத்துப்பாண்டி வெங்கடேஷை போட்டு அடிக்க வெங்கடேசன் பெற்றோர் இவனை ஏத்தி விடுவதை உங்க அப்பா தான் என உண்மையை போட்டு உடைக்க முத்து பாண்டி அதிர்ச்சி அடைகிறார்.இதுவரை அப்பாவின் மீது கோபப்படாத முத்துப்பாண்டி இம்முறை ஆவேசம் கொள்கிறான். அவர்களை அழைத்துக் கொண்டு நேராக தனது வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை எதிர்த்து சத்தம் போடுகிறான். நீ பண்ண வேலை மட்டும் சண்முகத்துக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என வார்னிங் கொடுத்து அங்கிருந்து கிளம்பி வருகிறான்.இதனைத் தொடர்ந்து சௌந்தரபாண்டி இனிமேலும் இவனை அந்த வீட்ல இருக்க விடக்கூடாது. எப்படியாவது அந்த குடும்பத்தை பிரிச்சு முத்துபாண்டியை இங்க கூட்டிட்டு வந்துடனும் என கணக்கு போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வீட்டுக்கு கிளம்பிய அஞ்சலி.. டென்ஷனான மகேஷ், லட்சுமி சொன்ன வார்த்தை – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட் கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி அம்மா வீட்டுக்கு செல்வதாக சொன்னதும் மகேஷ் டென்ஷனான இலையில் இன்று, மகேஷ் கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க அஞ்சலி அங்கு வந்து நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என்று கேட்க மகேஷ் வேண்டாம் என்று சொல்கிறான். இருவருக்கும் இடையே ரொமான்ஸ் அதிகரிக்கிறது.அடுத்ததாக கவின் வீட்டில் எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்க அவனது அம்மா பாலில் மருந்தை கலந்து கொடுக்க அவன் சுயநினைவின்றி மயங்கி விழுந்து கிடக்க ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். டாக்டர் உங்க பையனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்க கவினின் அப்பா என் பையனுக்கு அந்த மாதிரி பழக்கம் எல்லாம் இல்லை என அடித்து சொல்ல டாக்டர் இல்லை அவர் அளவுக்கு அதிகமா குடிச்சு இருக்காரு டெஸ்ட் எடுத்து உறுதியாக சொல்கிறோம் என்று சொல்கிறார்.அடுத்து இங்கே அஞ்சலி அம்மா வீட்டுக்கு கிளம்ப பேக் செய்து கொண்டு இருக்க இதைப் பார்த்த மகேஷ் டென்ஷன் ஆகி ஆபீஸிற்கு கிளம்பி வருகிறான். ஆபீஸுக்கு கிளம்பி வந்ததும் அவன் கண் முன் தோன்றும் மனசாட்சி அஞ்சலிக்கு உன் மேல லவ்வே கிடையாது. அவ அவளோட குடும்பத்தை தான் காதலிக்கிறா என்று சொல்ல மகேஷ் டென்ஷன் ஆகிறான்.இதைத்தொடர்ந்து மகேஷ் அஞ்சலிக்கு போன் போட்டு உனக்கு என் மேல லவ் இருக்கா இல்லையா என்று கேட்கிறான். அஞ்சலி என் வீட்ல இருக்க எல்லாரும் எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு அதே அளவுக்கு உங்களையும் லவ் பண்றேன் என்று சொல்ல நானும் அவங்களும் ஒன்னா என்று கேட்க அஞ்சலி இல்லை அவங்கள விட நீங்க ஒரு படி மேல என்று சொல்ல மகேஷ் சந்தோஷப்படுகிறான்.பிறகு ஹாஸ்பிடல் கவின் நிறைய குடித்திருப்பதாக ரிப்போர்ட் வர இந்த விஷயம் வருகிறது அவனது அப்பா அதிர்ச்சி அடைகிறார். சிவராமன் டல்லாக இருக்க லட்சுமி என்ன ஆச்சு வீட்டு செலவுகள் அடுத்தடுத்து வந்துகிட்டே இருக்கும் உங்களுக்கு கஷ்டம் கொடுத்துக்கிட்டே இருக்கோமா.. நானும் ஒரு வேலைக்கு போகவா என்று கேட்க சிவராமன் இதைவிட நாம எவ்வளவோ கஷ்டத்தை பார்த்திருக்கோம்.அப்பவே நான் உன்னை வேலைக்கு அனுப்புனதில்ல, நீ என்கூட இருந்தாலே போதும் எல்லாத்தையும் நான் சமாளிப்பேன் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நடந்து முடிந்த கார்த்திக், ரேவதி கல்யாணம்.. உண்மை உடைந்ததா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி திருமணம் நடந்து முடிந்த நிலையில் இன்று, மாயா சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் எவ்வளவோ முயற்சி பண்ணியும் இந்த கல்யாணம் நடந்திடுச்சு என்று வருத்தம் அடைகின்றனர்.இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி என் பேரனுக்கு உன் பொண்ண கட்டி வச்சுக்கோ என்று சொல்ல சாமுண்டீஸ்வரி யார் உங்க பேர என்று கேட்க கல்யாணம் ஆன பிறகு அவனும் என் பேர மாதிரி தானே என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.அடுத்ததாக கோவிலுக்கு வந்த பரமேஸ்வரி பாட்டி தேங்காய் உடைத்து முருகனுக்கு நன்றி செய்கிறார். அங்கே வந்த அபிராமி கல்யாண கோலத்தில் அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று தனது ஆசையை சொல்கிறாள். இந்த சமயத்தில் கார்த்திக், ரேவதி, ரோகிணி ஆகியோர் கோவிலுக்கு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.