Connect with us

தொழில்நுட்பம்

டால்பி அட்டாம்ஸ், 4கே தொழில்நுட்பம்; திரையரங்கை மிஞ்சும் டாப் 10 டி.வி-க்களின் பட்டியல்!

Published

on

T.V

Loading

டால்பி அட்டாம்ஸ், 4கே தொழில்நுட்பம்; திரையரங்கை மிஞ்சும் டாப் 10 டி.வி-க்களின் பட்டியல்!

நம் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை பட்டியல் போட்டால் அதில் நிச்சயமாக டி.வி இடம்பெறும். ஒரு முறை அதில் முதலீடு செய்தால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில் பார்த்துப் பார்த்து வாங்குவோம். அந்த வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய டாப் 10 டி.வி-க்களின் பட்டியல் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி-க்கள் அனைத்தும் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும்.1. சோனி பிரேவியா 43 இன்ச் (Sony Bravia 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED Google TV KD-43X64L)43 இன்ச் திரை கொண்ட இந்த டி.வி-யில் ஹெ.டி.ஆர் தரத்தில் காட்சிகளை பார்க்கலாம். ஸ்மார்ட் டி.வி என்ற அடிப்படையில் இதில் இணைக்கப்பட்டுள்ள கூகுள் மூலமாக டால்பி சவுண்ட் சிஸ்டத்தை பயனர்கள் அனுபவிக்க முடியும். அலெக்ஸா, ஹோம்கிட் உள்ளிட்டவை அடங்கிய இந்த டி.வி-யை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக வாங்கலாம்.2. சாம்சங் டி சீரிஸ் 43 இன்ச் (Samsung 108 cm (43 inches) D Series Brighter Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV UA43DUE77AKLXL)சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட இந்த டி.வி-யும் 43 இன்ச் திரை கொண்டது. இதில் யு.ஹெச்.டி தரத்தில் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். சாம்சங்கின் பிரத்தியேகமான பிக்ஸிபி மற்றும் ஸ்மார்ட்திங்க்ஸ் இயங்குதளம் மூலம் இதனை இயக்க முடியும். 20W ஸ்பீக்கர், ஹெச்.டி.எம்.ஐ மற்றும் யு.எஸ்.பி போர்ட்ஸ் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.3. எல்.ஜி 50 இன்ச் (LG 126 cm (50 inches) 4K Ultra HD Smart LED TV 50UR7500PSC)ரூ. 40 ஆயிரத்திற்குள் 50 இன்ச் திரையுடன் 4கே தரத்தில் கிடைக்கும் டி.வி-களில் இதுவும் ஒன்று. இதில் காட்சி அமைப்புகள் இயற்கையாக இருப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக எல்.ஜி நிறுவனம் கூறியுள்ளது. 20W ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சவுண்ட் சிஸ்டம் இந்த டி.வி-யில் இருக்கிறது. மேலும், கேம் விளையாடுபவர்களுக்கு ஏற்ற வகையில் இதனை உருவாக்கியுள்ளனர்.4. ரெட்மி ஜியோமி 55 இன்ச் (Redmi Xiaomi 138 cm (55 inch) F Series UHD 4K Smart LED Fire TV L55MA-FVIN)ஸ்மார்ட் ஃபீச்சர்கள் ஏராளமான வகையில் இந்த டி.வி-யில் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபயர் ஓ.எஸ் 7 இயங்குதளத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட செயலிகள் இதில் உள்ளன. அலெக்ஸா மூலமாக உங்கள் குரலை வைத்தே இதனை இயக்க முடியும். சுமார் ரூ. 40 ஆயிரத்திற்குள் இத்தனை அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், இதனை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.5. எம்.ஐ ஜியோமி 55 இன்ச் (Mi Xiaomi 138 cm (55 inches) X Series 4K LED Smart Google TV L55MA-AIN)டால்பி விஷன், ஹெச்.டி.ஆர், விவிட் தரத்தில் காட்சிகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. வேகமாக நகரும் காட்சிகளை சீராக காண்பிக்கும் எம்.இ.எம்.சி தொழில்நுட்பம் இதில் இடம்பெறுகிறது. 30W ஸ்பீக்கர்களுன் அதிர வைக்கும் சவுண்ட் குவாலிட்டி இந்த டி.வி-யில் இடம்பெற்றுள்ளது. மேலும், கேமர்களுக்கு தடையற்ற சேவையை அளிக்கும் விதமாக அதிவேகத்தில் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.6. சோனி பிரேவியா 2 சிரீஸ் (Sony BRAVIA 2 Series 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED Google TV K-43S20B)4கே பிராசஸருடன் 4கே தரத்தில் இந்த டி.வி-யில் காட்சிகளைக் காணலாம். கூகுள் டிவி அம்சமும் இதில் இணைக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் டிவிக்கான அனைத்து விஷயங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும், க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே மற்றும் அலெக்சாவும் இதில் இடம்பெறுகிறது.7. எம்.ஐ ஜியோமி 43 இன்ச் (Mi Xiaomi 108 cm (43 inches) X Series 4K LED Smart Google TV L43MA-AUIN)விவிட் தரத்தில் இதன் காட்சிகள் அனைத்தும் காண்போர் கண்களைக் கவரும் வகையில் இருக்கும். டால்பி விஷன், டால்பி அட்டோம்ஸ், 30W ஸ்பீக்கர், கேமிங் கனெக்டிவிட்டி என் மற்ற டி.வி-களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. 8. வி.யு 55 இன்ச் (Vu 139cm (55 inches) Vibe Series QLED 4K Google TV 55VIBE24)55 இன்சுடன் 4கே க்யூ.எல்.இ.டி தரத்தில் துல்லியமான காட்சி அமைப்பு இந்த டி.வி-யில் இருக்கிறது. ரிமோட்டை பயன்படுத்தாமல் குரல் மூலமாக இதனை இயக்கும் வகையில் ஸ்மார்ட் ஃபீச்சர் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் டிசைன் நம் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் வகையில் இருக்கும்,9. ஜியோமி 55 இன்ச் (Xiaomi 138 cm (55 inches) X Pro 4K Dolby Vision IQ Series Smart Google LED TV L55M8-5XIN)மற்ற ஜியோமி நிறுவனத்தின் டி.வி-களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதிலும் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக டால்பி விஷன் ஐ.க்யூ இதில் வருகிறது. 10. ஏசர் 55 இன்ச் (acer 139 cm (55 inches) I Pro Series 4K Ultra HD LED Smart Google TV AR55UDIGU2875AT)இந்த டி.வி-யின் முக்கியத்துவமே இதன் டிசைன் தான் என்று கூறப்படுகிறது. ஃப்ரேம்லெஸ் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டி.வி-யில் ஏ.ஐ இணைக்கப்பட்டுள்ளது. 36W ஆடியோ ஸ்பீக்கர், டால்பி விஷன் கொண்ட இந்த டி.வி- ஆண்ட்ராய்ட் 14 இயங்குதளத்துடன் அமைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன