சினிமா
தனுஷின் இட்லி கடை கொடுத்த லாபம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா

தனுஷின் இட்லி கடை கொடுத்த லாபம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
நடிகர் தனுஷ் தற்போது இயக்குநராகவும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார். இவர் இயக்கத்தில் அடுத்தாக உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார்.இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளிவரவிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது.இந்த நிலையில், தனுஷின் இட்லி கடை திரைப்படம் ரிலீஸுக்கு மும்பே பெரும் லாபத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக OTT உரிமை மட்டுமே ரூ. 45 கோடிக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.