இலங்கை
தபால்மூல வாக்களிப்பு; வாக்காளர் அட்டைகள் சனியன்று கையளிப்பு!

தபால்மூல வாக்களிப்பு; வாக்காளர் அட்டைகள் சனியன்று கையளிப்பு!
தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கையளிக்கப்படும் என அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஒவ்வொரு மாவட்ட செயலகங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறும் அரச உத்தியோகத்தர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களில் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.