இலங்கை
நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் சமய வழிபாட்டுடன் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்த இலங்கைத் தமிழரசு கட்சி!

நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் சமய வழிபாட்டுடன் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்த இலங்கைத் தமிழரசு கட்சி!
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரைகளை நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் சமய வழிபாட்டுடன் ஆரம்பித்த இலங்கைத் தமிழரசு கட்சி
நெடுந்தீவு ஜே /1 கிராமிய சேவையாளர் பிரிவில் முதலாம் வட்டாரத்தில் இப்பரப்புரை பணிகள் முன்னெடுக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது
நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு களுடன் நெடுந்திவு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை பணிகளை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆரம்பித்து வைத்தார்
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்னர்
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில்; கடந்த காலத்தில் நெடுந்தீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி சபையை ஆண்ட கட்சிகள் மக்களுக்கான சேவைகளை சரிவரச் செய்யவில்லை கட்சிகளுக்கு இடையே இருந்த பிளவுகள் இந்த சபையை நாம் இழக்க காரணமாக கடந்த காலத்தில் இருந்தன
இம்முறை நடைபெறும் பிரதேச சபை தேர்தலில் மக்கள் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மக்கள் பணிகளுக்காக இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன் என மேலும் கருத்து தெரிவித்தார்