டி.வி
ரோஹினி போடும் கண்டிஷன்: பஞ்சாயத்து செய்யும் பாட்டி; விஜயா வீட்டுக்கு வருவாரா?

ரோஹினி போடும் கண்டிஷன்: பஞ்சாயத்து செய்யும் பாட்டி; விஜயா வீட்டுக்கு வருவாரா?
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், ரோஹினி வீட்டில் மாட்டியதில் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது குடும்ப பிரச்னையை தீர்க்க, பாட்டி வீட்டுக்கு வந்துள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ரோஹினி ஸ்ருதிக்கு போன் செய்து தனக்கு ஆதரவாக பேசுமாறு கேட்க, அவரோ இன்னைக்கு பாட்டி வராங்க, என்ன நடக்கும்னு ஆர்வமாக இருக்கிறது நீங்களும் வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு, ரோஹினி தனக்கு ஆதரவாக பேசுவதற்காக எனக்கு போன் செய்தார் என்று ஸ்ருதி ரவியிடம் சொல்ல, ரவி ஆச்சரியப்படுகிறான்.இந்த பக்கம் வித்யாவிடம் பேசும் ரோஹினி இவளை எப்படியாவது என் வழிக்கு கொண்டு வரலாம் என்று பார்த்தால் இவள் உஷாராவிட்டாளே, இனி என் வாழ்க்கையை காப்பாத்திக்க நான் தான் எதாவது செய்ய வேண்டும். என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அடுத்து அண்ணாமலை மற்றும் பாட்டி வீட்டுக்கு வர, முத்து அவர்கள் இருவரையும் வரவேற்கிறான். அடுத்து மனோஜை அழைத்த பாட்டி அட்வைஸ் செய்கிறார்.ஆம்பிளை பிள்ளைகளை பெற்றால் நிம்மதியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் என் மகன் இன்னும் கஷ்டப்படுகிறான். அவன் இப்போ வரைக்கும் நிம்மதியாக இல்லை என்று சொல்ல, ரவியும், ஸ்ருதியும் உள்ளே வருகின்றனர். அவர்கள் பாட்டியை நலம் விசாரிக்க பாட்டியும் அவர்களிடம் விசாரிக்கிறார். மேலும் உன்னை விட சின்ன பசங்க தான் சரியாக இருக்கிறார்கள். ஆனால் நீ சரியாக இல்லை என்று மனோஜை திட்டுகிறார்.அதன்பிறகு மனோஜிடம் உன் மனைவி எங்கே என்று கேட்க, அவன் தெரியவில்லை என்று சொல்ல, உங்க அம்மாதான் அவளை அடித்து அனுப்பி இருக்கிறாள். ஆனால் உனக்கு அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாது. அவ எற்கு போயிருந்தாலும் பரவாயில்லை நீ அவளை வர சொல்வி போன் செய் என்று சொல்ல, மனோஜ் போன் செய்கிறான் ஆனால் ரோஹினி போனை எடுக்கவில்லை. அதேபோல், அண்ணாமலையிடம் விஜயாவை போன் செய்து வர சொல்கிறார்.அண்ணாமலை, ரோஹினி என்ன சொல்கிறாள் என்பதை பார்ப்போம் அதன்பிறகு, விஜயாவை கூப்பிடுவோம் என்று சொல்ல, அதுவும் சரிதான் என்று பாட்டி சொல்கிறார். அதன்பிறகு மனோஜ் ரோஹினிக்கு போன் செய்ய, ரோஹினி அங்கு வந்தால், உங்க அம்மா என்னை அடிக்கவோ திட்டவோ கூடாது. உனக்கு மட்டும் தான் என்னை அடிக்க திட்ட உரிமை இருக்கிறது என்று சொல்ல, மனோஜ் அதை எல்லோரிடமும் சொல்கிறான். இதனால் ரோஹினி கோபப்பட, அவளை வர சொல் பார்த்துக்கொள்ளலாம் என்று பாட்டி சொல்ல, அத்துடன் எபிசோடு முடிகிறது.