Connect with us

இலங்கை

இலங்கையின் பண்டைய பெயர்கள் மற்றும் வரலாறு

Published

on

Loading

இலங்கையின் பண்டைய பெயர்கள் மற்றும் வரலாறு

வரலாற்று அடிப்படையில் ஶ்ரீலங்கா என்கிற பெயர்
வருவதற்கு முன்னர் இலங்கை இலங்காபுரியென்றே தமிழ் இலக்கியங்களில்
குறிப்பிடப் பட்டு வந்ததை காணமுடியும்.

மேலும் இராவணனை இலங்கை
வேந்தன் என்றுதான் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஶ்ரீலங்கா என்கிற
பெயர் இலங்கை என்கிற தமிழ்ப் பெயரின் சமஸ்கிருத மொழி வடிவம் என்பதாகத்தான்
பார்க்க முடிகிறது.

Advertisement

புத்த மதத்தை இலங்கையில் புகுத்த வந்த வட இந்திய
மற்றும் தெலுங்கு மொழிகள் பேசும் (புத்த மதப் பிரச்சாரகர்கள் )பிக்குகள்
தமது புத்த மத போதனைகளை செய்வதற்காக ,பாளி ,சமஸ்கிருத மொழிகளுடன்
இலங்கையில் அக்காலத்தில் பேசப்பட்ட எழு எனப்பட்ட மொழியைக் கலந்து
உருவாக்கிய மொழிதான் சிங்களம்.

இலங்கையை ஶ்ரீலங்கா என சமஸ்கிருத
மயப்படுத்தி அழைக்கும் வழக்கத்தை சிங்கள மொழியில் புகுத்தியவர்கள் இந்தப்
புத்த பிக்குகள் என்பதே எனது கருத்து. ஶ்ரீலங்கா என இலங்கையை அழைப்பது
சிங்கள மக்களும் புத்த பிக்குகளும் மட்டுமே.

இலங்கையின் இந்தப்
பெயரையம் புத்த மதத்தையும் சிங்கள மொழியையும் அரசியலுக்கு பயன்படுத்தினால்
ஆட்சியைப் பிடித்து விடலாம் என்கிற யுக்தியை பண்டாரநாயக்கா தெரிந்து
கொண்டார்.

Advertisement

1947 ல் டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையிலான அரசில் பண்டார
நாயக்கா ஒரு பங்காளியாக இணைந்து அமைத்தார். அடுத்த பிரமதராகும் வாய்ப்பு
தமக்கே வேண்டும் என்கிற நினைப்பில் இருந்த வாய்ப்பை சேனநாயக்கா மறுத்ததும்
அல்லாமல் தமது மகன் டட்லியே வரவேண்டும் என முடிவும் எடுத்தார்.

இதனால்
1951ல் பண்டார நாயக்கா விலகி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கி 1956
தேர்தலில் பிற இடதுசாரிக் கட்சிகளுடன் மக்கள் ஐக்கிய முன்னணிஎன்கிற
கூட்டணியாக போட்டி இட்டு ஆட்சி அமைத்தார்.

பிரதமரானதும் இடதுசாரி
கொள்கை காரணமாக வெளிநாட்டு கம்பனிகள் வங்கிகள் பெற்றோல் நிறுவனங்களை
என்பனவற்றை தேசிய உடமைகள் ஆக்கியதால் அவர் சர்வ தேச அளவில் முதலாளித்துவ
நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளானார்.

Advertisement

1960ல்
அவரை ஒரு புத்த பிக்குவே அவரது வீட்டில் சுட்டுக் கொன்றார். ஒரு
சம்பிரதாயமாக வழக்கு விசாரணை நடத்தி சந்தேக நபரான புத்த பிக்குவுக்கு
மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது. ஆயினும் அவரது கொலையில் சீ.ஐ.ஏ.இருந்தது
என்கிற சந்தேகம் மக்கள் இடையே இருக்கவே செய்கிறது.

அவரைத் தொடர்ந்து
அவரது மனைவி ஶ்ரீமாவோ பிரதமராகி 1977 வரை ஆட்சி செய்தார். 1972ல்
குடிஅரசாக மாற்றிய ஶ்ரீமாவோ அரசு தமது கட்சின் பெயரை முதலாகக் கொண்டு
இலங்கையின் பெயரைச் ஶ்ரீ லங்கா என அரசியல் சாசனச் சட்டத்தில் உறுதிப்
படுத்தினார்.

ஶ்ரீ லங்கா எனச் சமஸ்கிருத இலக்கியங்கள் இலங்கையைக்
குறிப்பிட்டு வந்த போதிலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி செய்த
காரணத்தால் அப்பெயர் இலங்கைக்கும் மாற்றப் பட்டது எனலாம்.

Advertisement

பின்னர்
இலங்கையின் அரசமைப்பு மாற்றங்களைக் குறித்து ஓரு விமர்சனம் வைக்கப் பட்ட
பொழுது ஒவ்வொருஅரசமைப்பு மாற்றமும் ஆளும் அரசியல் கட்சிகளின்
தேவைகளுக்காகவே செய்யப் பட்டனவே அல்லாது நாட்டுக்கோ நாட்டு மக்களின்
தேவைகளுக்காவோ செய்யப் படவில்லை எனச் சொல்லப் பட்டது.

1972 மே மாதம் தொடக்கம் இலங்கையின் பெயர் ஶ்ரீ லங்கா என மாற்றம் கண்டது.

இலங்கையின் பழைய பெயர்கள்

Advertisement

தப்ரோபேன் – கிரேக்கர்

செரண்டிப் 

சீல துவீபம்

Advertisement

சீலன்

சிலோன் – ஆங்கிலேயர் 

இலங்கை

Advertisement

ஈழம் – தமிழர்

லங்காவ – சிங்களவர்

தர்மதீபம் – நாகர்

Advertisement

சேலான் – போர்த்துக்கீசர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

images/content-image/1743617121.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன