உலகம்
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு!..

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு!..
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு அட்லாண்டிக்கில் தீவிலுள்ள ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரின் தெற்கே ரையாக்ஜென் தீபகற்பத்தில் அமைந்துள்ள எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் லாவா எரிமலை குழம்பு வெளியேறி அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ப)