பொழுதுபோக்கு
குக் வித் கோமாளி சீசன் 6: கோமாளியாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்; யார் தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 6: கோமாளியாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்; யார் தெரியுமா?
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த சீசனில் பங்கேற்க உள்ள நட்சத்திரங்கள் யார் யார் என்பது குறித்து தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. பிரபல செஃப் வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியை வி.ஜே.ரக்ஷன் தொகுதி வழங்கி வந்தார். குக்குகள் சமைப்பதும், அவர்களுக்கு உதவி செய்வது போல் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாகும்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், சிவாங்கி, புகழ், பாலா, அஸ்வின் உள்ளிட்ட பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் நடுவர்களாக 4 சீசன்கள் முடிந்த நிலையில், நிகழ்ச்சியின் 5-வது சீசனில், செஃப் வெங்கடேஷ் பட் திடீரென விலகிய நிலையில், நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.இதனைத் தொடர்ந்து பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5-வது சீசன் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததது. இந்த சீசனில் தொகுப்பாளினியாக பங்கேற்ற மணிமேகலைக்கும், போட்டியாளராக பங்கேற்ற பிரியங்காவுக்கும் இடையே மோதல் வெடித்தது பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையிலும், குக் வித் கோமாளி சீசன் 5 வின்னராக வி.ஜே.பிரியங்கா அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில், வழக்கம்போல் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாகவும் வி.ஜே.ரக்ஷன் தொகுப்பாரளாகவும் பங்கேற்க உள்ள நிலையில், போட்டியாளர்களாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று 2-வது இடம் பிடித்த சௌந்தர்யா கோமாளியாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுனிதாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், தற்போது இருவரும் கோமாளிகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பங்கேற்பார்களா எனற கேள்வியும் எழுந்து வருகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.