பொழுதுபோக்கு
செல்போனுக்கு அடிமை: தனக்கு தானே ஊசி போட்டுக்கொண்ட கல்லூரி மாணவர் மரணம்!

செல்போனுக்கு அடிமை: தனக்கு தானே ஊசி போட்டுக்கொண்ட கல்லூரி மாணவர் மரணம்!
சென்னை கொடுங்கையூரில் தனக்கு தானே ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை கொடுங்கையூர், மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் பால் யூட்டி க்ளாஸ். 20 வயதான இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். செல்போன் பயன்படுத்துவதில் அதீத ஆர்வத்துடன் இருந்து வந்த இவர், பல நாட்களாக செல்போன் பயன்படுத்திக்கொண்டு தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சென்னை சேத்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.இதனிடையே நேற்று மதியம் இவர் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை பார்த்து அதிர்ச்சியான அவரது பெற்றோர் உடனடியாக மகனை மீட்டு அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பால் யூட்டி க்ளாஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.இந்த விசாரணையில், இறந்த மாணவர் பால் யூட்டி க்ளாஸ் தனக்கு தானே சோடியம் நைட்ரெட் ஊசியை செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தனக்கு தானே ஊசி செலுத்திக்கொள்ள காரணம் என்ன? மனஉளைச்சல் காரணமாக இப்படி செய்தாரா என்பது குறித்து, பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இறந்த மாணவர் பால் யூட்டி க்ளாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.செல்போனுக்கு அடிமையான ஒரு மாணவன் கடந்த 2 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஒரு மாணவர் தனக்கு தானே ஊசி போட்டுக்கொண்டு மரணமடைந்த சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,