இந்தியா
பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்து; 13 பேர் உயிரிழப்பு!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை தொழிற்சாலையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திடீரென ஏற்பட்டவெடிவிபத்தினால் பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ விரைவில் பரவியதோடு தொழிற்சாலையின் மேற்கூரையும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.