பொழுதுபோக்கு
மூத்த ஹீரோக்களுக்கு ஜோடியாக இளம் நடிகைகள்: நிஜ வாழ்க்கையிலும் அதை செய்வேன்; கமல்ஹாசன் ஓபன் டாக்

மூத்த ஹீரோக்களுக்கு ஜோடியாக இளம் நடிகைகள்: நிஜ வாழ்க்கையிலும் அதை செய்வேன்; கமல்ஹாசன் ஓபன் டாக்
இந்திய சினிமாவில் வயது அதிகமாக முன்னணி நடிகர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடிப்பதில்லை என்ற விவாதம் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து பெரிதாக இருந்து வருகிறது. குறிப்பாக, நடிகர்கள் தங்கள் உண்மையான வயதை மறந்து தங்களை விட, 2 தசாப்தங்கள் இளய கேரக்டரில் நடிப்பதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிப்பதால் அந்த நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்க்க வழிவகுக்கிறது.இப்படி முன்னணி நடிகர்கள், தங்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் வயது நடிகர்களின் வயதை விட பாதி வயது தான் இருக்கும். இந்த விவாதம் சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த படத்தில், சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சல்மான் – ராஷ்மிகா இடையேயான வயது வித்தியாசம் கடுமையாக விமர்சனங்களை எழுப்பியது.நாயகனாக நடித்த சல்மானுக்கு 59 வயது, ராஷ்மிகாவுக்கு 28 வயது, இது ஒரு விவாதப் பொருளாக மாறினாலும் இதற்கு சல்மான் அப்போதே பதில் கொடுத்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “நாயகிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, கதாநாயகியின் தந்தைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் பிரச்சினை? அவள் (ரஷ்மிகா) திருமணம் செய்துகொண்டு ஒரு மகளைப் பெற்றெடுத்து அந்த மகள் ஒரு பெரிய நட்சத்திரமாகும்போது, நாங்கள் (ஒன்றாக) பணியாற்றுவோம். நிச்சயமாக அம்மாவின் (ரஷ்மிகா) அனுமதியைப் பெற்று இதை செய்வோம் என்றள கூறியிருந்தார்.இப்போது, இந்தக் கேள்வி வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதை ‘நகைச்சுவை’யாகச் சொல்லலாம். ஆனால் இது 60கள் மற்றும் 70 வயதுகளில் இருக்கும் நமது சூப்பர் ஸ்டார்களிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. அதே சமயம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனது படங்களில் ‘ஜோடி’ இல்லாத நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளர்-அரசியல்வாதி கமல்ஹாசனிடம், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு என்டி.டிவி நேர்காணலில் இந்த நிகழ்வு குறித்து கேட்கப்பட்டது. உண்மையில், தென்னிந்திய சினிமாவில் 50கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கிறார்களா என்று கேட்டபோது, கமல்ஹாசன் உடனடியாக அதையே செய்யும் பிற துறைகளைச் சேர்ந்த நடிகர்களைப் பட்டியலிட்டார்.“கிளின்ட் ஈஸ்ட்வுட், சார்லஸ் பிரான்சன், கேரி கிராண்ட், அமிதாப் பச்சன், உண்மையில், திலீப் (குமார்) சாப் 40களின் நடுப்பகுதியில் ராம் அவுர் ஷ்யாம் நடித்தார். எனவே, நம்மால் முடிந்தவரை, நாம் ஹீரோவாக பயணம் செய்ய வேண்டும், ”என்று கமல்ஹாசன் கூறினார், அது சமயம், தனது 50களில் இருக்கும்போது கல்லூரி மாணவராக நடிக்காமல் இருப்பதுதான் அவர் செய்யக்கூடியது என்று கூறினார். ஆனால் கேள்விகள் நடிகர்கள் தங்கள் வயதில் பாதி வயதுள்ள கதாநாயகிகளை காதலிப்பதாக கூறியது குறித்து பதில் அளித்த, கமல்ஹாசன் “வாழ்க்கையிலும் கூட என்னால் அதைச் செய்ய முடியும். அது அவ்வளவு கடினம் அல்ல. கலை வாழ்க்கையைப் பின்பற்றினால், அது மிகவும் சாத்தியம். ஓனாசிஸ் தனது வயதில் பாதி வயதுடைய ஒருவரை மணக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.கமல்ஹாசன் தனது சமீபத்திய படங்களில் வரும் கதாபாத்திரங்கள், குறிப்பாக அவர் 60 வயதை எட்டியதிலிருந்து, அவரது வயதுக்கு நெருக்கமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாக அவர் மிகவும் இளமையான கேரக்டர்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்திய சினிமாவில் உள்ள மற்ற நடிகர்களைப் பற்றியும் இதேபோல் சிந்திப்பது ஒரு நீண்ட கால முடிவு. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகமான கேள்விகள் இருக்கிறது.