இலங்கை
வீழ்வேனென்று நினைத்தாயோ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா!

வீழ்வேனென்று நினைத்தாயோ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா!
கைலாசா சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கைலாசாவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நித்தியானந்தா இன்று நேரலையில் தோன்றுவார் என்றும் கைலாசா சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசா என்ற அதிகாரி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில்,
சில ஊடகங்கள், உச்ச இந்து பீடாதிபதி நித்தியானந்தா தமது இயற்கை வாழ்வை விட்டுவிட்டார் என்று தவறான, திட்டமிட்ட மற்றும் துயரமான தகவல்களை பரப்பியுள்ளனர்.
நித்தியானந்தா தற்போது ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், செயல்படிக்கூடிய நிலையிலும் உள்ளார் என உறுதிப்படுத்தினார்.