பொழுதுபோக்கு
10 நிமிடம் டைம்… முடிஞ்சா பதில் சொல்லுங்க; எம்.ஜி.ஆர் பட இயக்குனருக்கு கேள்வியால் செக் வைத்த வாலி!

10 நிமிடம் டைம்… முடிஞ்சா பதில் சொல்லுங்க; எம்.ஜி.ஆர் பட இயக்குனருக்கு கேள்வியால் செக் வைத்த வாலி!
வாலிப கவிஞர் என்று அழைக்கப்படும் வாலி, ஒரு பாடல் எழுதும்போது, படக்குழுவுக்கு ஒரு விடுகதை சொல்ல, அந்த விடுகதைக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?எம்.ஜி.ஆர் நடிப்பில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான படம் முப்பெரும் தேவியர். சுஜாதா, நம்பியார், பிரபு, செந்தில், கே.ஆர்.விஜயா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் 2 பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். பக்தி படமாக வெளியான இந்த படத்தில் கேள்வி பதிலுடன் இணைந்த ஒரு பாடல் இடம் பெற்றுள்ளனர்.தான் என்ற கர்வம் கொண்ட ஒரு புலவன், தன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று சொல்ல, அவனிடம் தோற்றுப்போன புலவன் ஒருவன், சரஸ்வதி தேவியிடம் அழுது புலம்ப, சரஸ்வதியே இறங்கி வந்து, அந்த புலவனிடம் பாடல் போட்டியில் பங்கேற்கிறார். அப்போது வரும் அந்த பாடல், அந்த புலவன் கேள்வி கேட்க, அதற்கு சரஸ்வதி தேவி பதில் சொல்வது போல் அமைந்திருக்கும். இந்த பாடல் எழுதும்போது, கவிஞர் வாலி, படக்குழுவுக்கு ஒரு விடுகதை கூறியுள்ளார்.சரஸ்வதி தேவி கேட்கும் ஒரு கேள்விக்கு, அந்த புலவன் பதில் சொல்லவே கூடாது. அதன்பிறகு சரஸ்வதி அந்த கேள்விக்கான பதிலை சொல்லும்போது அனைவரும் ஆச்சரியப்பட வேண்டும் அப்படி ஒரு பாடலை நீங்கள் எழுதி ஒரு கேள்வியும் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குனர் கே.சங்கர் சொல்ல, கவிஞர் வாலி வெற்றிலைபாக்கு போட்டுக்கொண்டே எப்படி எழுதுவது என்று யோசித்து ஒரு வரியை எழுதியுள்ளார். எறும்பின் வாயை விட சின்னது அது என்னது என்று கேட்டுள்ளார்.இதை கேட்ட இயக்குனர் கே.சங்கர், என்ன இது இப்படி இருக்கிறது என்று கேட்க, உங்கள் யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள். 10 நிமிடம் டைம் என்று கூறியுள்ளார். உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் நானே சொல்கிறேன் என்று வாலி சொல்ல, பதில் என்றால் எதோ ஒப்பேத்தி சொல்லக்கூடாது. சரியாக இருக்க வேண்டும் என்று சொல்ல, வாலியும், நான் சொல்லும் பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று சொல்லி, எறும்பின் வாயை விட சின்னது அது தின்னது என்று கூறியுள்ளார். இதை கேட்டு படக்குழுவே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.