விளையாட்டு
RCB vs GT LIVE Score: டாஸ் வென்ற குஜராத் பவுலிங் – பெங்களூரு முதலில் பேட்டிங்!

RCB vs GT LIVE Score: டாஸ் வென்ற குஜராத் பவுலிங் – பெங்களூரு முதலில் பேட்டிங்!
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, RCB vs GT LIVE Cricket Score Online டாஸ் வென்ற குஜராத் பவுலிங் – பெங்களூரு முதலில் பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு முதலில் பேட்டிங் ஆடுகிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா. நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளில் வென்று பெங்களூரு அணி வெற்றி நடைபோட்டு வருகிறது. அந்த அணி சொந்த மைதானத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்த நினைக்கும். அதற்கு முட்டுக் கட்டை போடவே குஜராத் முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் பெங்களூரு 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் குஜராத் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.