பொழுதுபோக்கு
இப்போ சின்னத்திரை டாப் ஸ்டார்; இந்த வாரிசு நடிகை யார் தெரியுமா?

இப்போ சின்னத்திரை டாப் ஸ்டார்; இந்த வாரிசு நடிகை யார் தெரியுமா?
விஜயகாந்த் நடிப்பில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் லிவிங்ஸ்டன்.வெள்ளித்திரையில் வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான வேடங்களில் நம்மை கவர்ந்த இவர் சில பட்ங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், லிவிங்ஸ்டன் மகள், ஜோவிதா தன் தந்தையில் பெயரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் தூள் கிளப்புகிறார்.சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் முதல் முதலில் அறிமுகமான ஜோவிதா, சில வாரங்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.அருவி சீரியலில் அருவியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தன் துருதுரு நடிப்பால் மக்களை ஈர்க்கும் ஜோவிதாவின் நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோவிதா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் ஜீ தமிழில் தொடங்கிய மௌனம் பேசியதே சீரியலில் நடித்து வந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்,