சினிமா
இப்ரானை வெளுத்து வாங்கிய வலைப்பேச்சு அந்தணன்..! நடந்தது என்ன..?

இப்ரானை வெளுத்து வாங்கிய வலைப்பேச்சு அந்தணன்..! நடந்தது என்ன..?
தமிழ் யூடியூப் உலகம், சமீபத்திய வருடங்களில் வளர்ந்து வரும் ஒரு தனி சினிமா பிராந்தியமாகவே மாறிவிட்டது. இதில் பிரபலமான பல யூடியூபர்கள், இணையத்தள வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகின்றனர். அந்தவகையில், சமீப காலமாக விவாதங்களை உருவாக்கும் பெயராக உருவெடுத்துள்ளார் யூடியூபர் இப்ரான். அவருடைய விமர்சனங்கள், பேச்சு மற்றும் வீடியோக்கள் இவை அனைத்தும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளன.இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வலைப்பேச்சு அந்தணன், தன்னைச் சுற்றி நடந்த பல விடயங்களைப் பகிர்ந்ததோடு, இப்ரான் குறித்தும் திடீர் கருத்துக்களைக் கூறியுள்ளார். அவரது இந்த உரை, தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.அதில் அந்தணன் கூறியதாவது, “இப்ரான் என்ன செய்தாலும் ஒரு கூட்டம் அவரை சரியா தான் செய்கிறார் என்று சொல்லி சப்போர்ட் பண்ணுவாங்க. இந்த நிலைமை அவரை தப்பான முடிவுகளுக்குத் தள்ளிக் கொண்டு போகின்றது” எனக் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் “இப்ரான் செய்த மாதிரியான செயல்களை வேறு யாராவது செய்திருந்தால் அவரை அனைத்து மக்களும் கடுமையாக விமர்சித்திருப்பார்கள். ஆனால் இப்ரான் செய்ததை சிலர் சாதாரணமான விடயம் எனக் கருதியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார். இப்ரான் மற்றும் அந்தணன் இருவரும் சமூக வலைத்தளங்களில் தனித்துவம் கொண்ட பிரபலங்கள். இப்போது இவர்கள் இடையே உருவான இந்தக் கருத்து மோதல் எத்தகைய விவாதங்களை உருவாக்கும் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.