Connect with us

சினிமா

கணவருடன் கைபிடித்து ஸ்டைலாக போஸ் கொடுத்த ஹன்ஷிகா..! – வைரலான ரொமாண்டிக் புகைப்படங்கள்..!

Published

on

Loading

கணவருடன் கைபிடித்து ஸ்டைலாக போஸ் கொடுத்த ஹன்ஷிகா..! – வைரலான ரொமாண்டிக் புகைப்படங்கள்..!

நடிகை ஹன்ஷிகா, எங்கேயும் எப்போதும், போகன் மற்றும் புலி போன்ற படங்களில் தனது அழகான தோற்றம் திறமையான நடிப்பு என்பவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். திரைப்படங்கள் மட்டுமின்றி டீவி ஷோக்கள், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இவரது ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்து கவனிக்கப்படுகின்றது. தற்பொழுது, அவர் பங்கேற்ற நிகழ்வில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரபல தனியார் நிகழ்வில் நடிகை ஹன்ஷிகா தனது கணவருடன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இருவரும் அழகான உடைகளை அணிந்து மிகவும் ஸ்டைலாகக் காணப்பட்டனர். அதன்போது இவர்கள் இருவரும் ரசிகர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வேகமாகப் பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மற்றும் நெகிழ்ச்சியான கருத்துகள் என்பன தற்பொழுது அனைத்து ஊடகங்களிலும் பரவியுள்ளன.மேலும், சில ரசிகர்கள் இந்த காதல் ஜோடியைப் பார்த்து “தமிழ் சினிமாவில் ஒரு கியூட் கப்பிள்ஸ் இவங்க தான்” என்று பாராட்டுகின்றனர். ஹன்ஷிகா ஒரு காலத்தில் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடித்தாலும், சில ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றார்.  எனினும் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்தும் கவனத்தைப் பெறுகின்றன.இதனைப் பார்த்த ரசிகர்களுக்கு அவரது அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் உருவாகியுள்ளது. மேலும் ஹன்ஷிகா தனது திருமணத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் அடிக்கடி கணவருடன் கலந்து கொள்வதுடன் அந்த ஜோடிக்கு எப்பவுமே ரசிகர்களிடம் தனி வரவேற்பும் உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன