Connect with us

விளையாட்டு

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுன; ஆர்.சி.பி-யை பொளந்துகட்டும் சி.எஸ்.கே பேன்ஸ்!

Published

on

rcb mems

Loading

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுன; ஆர்.சி.பி-யை பொளந்துகட்டும் சி.எஸ்.கே பேன்ஸ்!

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவுக்கு வில்லனான போரா அன்பு பரிசாக ரெட் சிப் ஒன்றை மாட்டிவிடுவார். அதன்பின் சிட்டி ரோபாவின் அதிரடி தொடங்கும். இதில் போராவாக ஆஷிஷ் நெஹ்ராவையும், சிட்டி ரோபாவாக முகமது சிராஜ்-ஆக மாற்றி, ஆஷிஷ் நெஹ்ரா சிராஜ்-க்கு ரெட் சிப்பை மாட்டிவிட்டு ஆர்சிபி அணியை பொளந்துவிட்டதாக ரசிகர்கள் உருவாக்கிய மீம் பேசிக்கலாகவே நான் வில்லன்டா மொமண்ட்.லியோ படத்தில் கழுதை புலியை குறி வைத்து தாக்க தயாராகும் கவுதம் மேனன், கடைசி நேரத்தில், “துப்பாக்கி வேலை செய்யல பார்த்திபன்” என்று ட்விஸ்ட் வைப்பார். அதில் வரும் கவுதம் மேனனாக ரஷீத் கானை மாற்றி கடைசி நேரத்தில், துப்பாக்கி வேலை செய்யவில்லை சுப்மன் கில் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சண்டைனு வந்துட்டா சட்டை கிழியத்தான செய்யும் ரகம்.தாஸ் படத்தில் கிட்னியை பறிகொடுத்த வடிவேலு, மதுரை இட்லி-க்கு தானடா ஃபேமஸ்னு சொன்னாங்க.. கிட்னி-க்குமா ஃபேமஸு என்று சொல்வார். இதில் வரும் வடிவேலுவை ஆர்.சி.பி. ரசிகர்களாக மாற்றி, “பட்லர் மும்பை இந்தியன்ஸ்-க்கு தானே ஃபேமஸ்னு சொன்னாங்க.. ஆர்.சி.பி-க்கும் ஃபேமஸா..” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடி வாங்கிய மொமண்ட்.பட்ஜெட் பத்மநாபன் படத்தில் காயம்பட்டு படுத்திருக்கும் விவேக்கை பார்த்து வடிவேலு, “என்னென்ன பேசுனடா.. மன்னர் பரம்பரை.. மண்ணாங்கட்டி பரம்பரைனு சொன்னியே.. இப்போ பாரு மாவுக்கட்டு பரம்பரை ஆகிட்டாங்க” என்று நக்கல் செய்வார். இதில் வரும் வடிவேலுவை சிஎஸ்கே ரசிகர்களாகவும், விவேக்கை ஆர்சிபி ரசிகர்களாகவும் மாற்றி, “மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைனு சொன்னியே.. இப்போ பாரு.. மாவுக்கட்டு பரம்பரை ஆகிட்டாங்க” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வாடி என் மாமாக்குட்டி ரகம்.அர்ஜூன் படம் ஒன்றில், தாதானா யாருனு தெரியுமாடா என்று கைகளை கிழித்து காமெடி நடிகர் வம்புக்கு இழுப்பார். அதில் வரும் தாதாவாக தமிழக வீரர் சாய் சுதர்சனை மாற்றி, “கன்சிஸ்டன்சினா என்னனு தெரியுமாடா” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் ரகம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன