சினிமா
சிக்கலில் சிக்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு..! விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்!

சிக்கலில் சிக்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு..! விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்!
தமிழ் சினிமா உலகத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருந்த ஜகஜால கில்லாடி திரைப்படம் தற்போது ஒரு பெரிய சட்டப் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான துஷ்யந்த் படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3 கோடி 74 லட்சத்தினைக் கடனாக பெற்றிருந்தார்.இந்தக் கடனை, வருடத்திற்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற உறுதிமொழி துஷ்யந்த் அளித்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. கடன் தொகையை திருப்பிக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில், சென்னை கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் அவர்களை மத்தியஸ்தராக நியமித்தது. இருதரப்புகளுடனும் நேரில் பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி தற்பொழுது தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளார்.அந்த பரிந்துரையின் படி, “ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைத்து, வட்டி உட்பட ரூ.9 கோடி 2 லட்சம் தொகையை வசூலிக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் முக்கியமான திருப்பமாக, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொந்த வீட்டின் மீது ஜப்தி நடவடிக்கை முன்வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துகளை பரிசீலனை செய்யும் வகையில், வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் திகதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது. அந்நாளில் முக்கிய முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.