பொழுதுபோக்கு
ஜெயிலர் முதல் ஹோம் டவுன் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள் இதுதான்!

ஜெயிலர் முதல் ஹோம் டவுன் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள் இதுதான்!
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட வாரந்தோறும் ஒடிடி தளங்களில் வெளியாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வகையான ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஹட்ஸ்டமார், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு ஒடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகும் புதிய படங்கள் குறித்து பார்ப்போம்.சமக் – தி கன்க்ளூஷன்2023-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமக் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த வெப் தொடரின் 2-வது சீசன், ஏப்ரல் 4-ந் தேதி சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது ஆதர்ஷ்யம் 22024-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற வெப் தொடர் ஆதர்ஷ்யம். தற்போது இந்த வெப் தொடரின் 2-வது சீசன் தயாராகியுள்ள நிலையில், இந்த வெப் தொடர், சோனி லிவ் சேனலில் நாளை (ஏப்ரல் 4) வெளியாக உள்ளது. ஒரு ஜாதி ஜாதகம்மலையாளத்தில் வெளியாக காமெடி படமான ஒரு ஜாதி ஜாதகம் திரைப்படம், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி மனோராமா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மச்சன்டே மளகாமலையாளத்தில் காமெடி கதைகளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த மச்சன்டே மளகா திரைப்படம் நாளை (ஏப்ரல 4) மனோரமா மேக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.ஜெயிலர்வினித் சீனிவாசன் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம், நாளை (ஏப்ரல் 4) மனோரமா மேக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. டச் மீ நாட்தெலுங்கில் தயாராகியுள்ள இந்த வெப் தொடர், ஏப்ரல் 4-ந் தெதி சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சூப்பர் பவர் கொண்ட 2 இளைஞர்கள் க்ரைம் சம்பங்களை கண்டறியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது,ஹோம் டவுன்தெலுங்கில் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ள வெப் தொடர் ஹோம் டவுன். இந்த வெப் தொடர், ஏப்ரல் 4-ந் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.