Connect with us

சினிமா

தக்லைஃப் சாதனையில் ஜாக்பாட் அடித்த உலகநாயகன்..! வரவேற்பெல்லாம் பயங்கரமாக இருக்கே..!

Published

on

Loading

தக்லைஃப் சாதனையில் ஜாக்பாட் அடித்த உலகநாயகன்..! வரவேற்பெல்லாம் பயங்கரமாக இருக்கே..!

இந்திய திரையுலகில் தற்போது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது ஹீரோக்களின் படங்கள் OTT தளங்களில் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என்பது தான். பல ஹீரோக்களின் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே OTT உரிமையில்  விற்பனை செய்து பெரும் வருமானத்தை பெறுவதுடன் அதே சமயம் அந்தப் படத்தின் மதிப்பையும் உயர்த்துவதற்கும் இம்முறை பயன்படுகின்றது.அந்த வகையில், தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தும் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்திருக்கும் தக்லைஃப் படம் தற்பொழுது 149.7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.பாலிவுட் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்றாக தக்லைஃப் இருக்கும் என ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். தற்பொழுது வெளியான தகவலின் படி விஜயின் ஜனநாயகன் படத்தின் வசூலை தக்லைஃப் படம் மிஞ்சியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.தக்லைஃப் திரைப்படம், தயாரிப்பு தொடங்கும் முதல் நாளிலிருந்தே எதிர்பார்ப்பை கிளப்பி வந்தது. அந்தவகையில் 149.7 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியது என்பதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு திரைப்படம் திரையில் வருவதற்கு முன்னரே இவ்வளவு  வருமானத்தை பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன