Connect with us

சினிமா

துக்கத்தில் மூழ்கிய பாரதிராஜாவுக்குப் பாடல் மூலம் ஆறுதல் கூறிய முன்னணி இசையமைப்பாளர்..!

Published

on

Loading

துக்கத்தில் மூழ்கிய பாரதிராஜாவுக்குப் பாடல் மூலம் ஆறுதல் கூறிய முன்னணி இசையமைப்பாளர்..!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் இறந்த மனோஜ் பாரதிராஜா மென்மையான நடிப்பின் மூலம் இயக்குநர் பாரதி ராஜாவின் வாரிசு என்ற அடையாளத்தைக் கடந்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்.அவரது திடீர் மறைவு, தமிழ் சினிமா உலகத்தையே உலுக்கியது. அதிலும், மகனின் இழப்பில் மிகவும் கவலையில் இருந்த இயக்குநர் பாரதிராஜா, தனது பழைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் ஆறுதலால் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டு வருகின்றார்.அத்தகைய சூழலில், இசையமைப்பாளர் கங்கை அமரன் நேரில் பாரதிராஜாவை சந்தித்து கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து, தனது ஆழ்ந்த வருத்தத்தையும், உணர்ச்சியையும் தெரிவித்துள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் இருவருமே தமிழ் சினிமாவில் 90களிலிருந்தே நண்பர்களாக காணப்படுகின்றனர். அந்தவகையில் மனோஜ் தமிழில் பல முக்கியமான படங்களில் நடித்திருக்கின்றார். தனது தந்தையின் கலை மரபை பின்பற்றியே சினிமாத் துறையில் முன்னேறியுள்ளார். அந்தவகையில் கங்கை அமரன் தற்பொழுது பாடல் மூலம் கூறும் வார்த்தைகள் பாரதிராஜாவின் துயரத்திற்கு மருந்தாகவே காணப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன