இலங்கை
தென்னக்கோனுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8இல்!

தென்னக்கோனுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8இல்!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை எதிர்வரும்; 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இதுதொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் ஆகிய திகதிகளில் கூட்டுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய 8ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தல் சமர்ப்பிக்கப்படும்.
ஏப்ரல் 10ஆம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை’ மீதான விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.