
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 03/04/2025 | Edited on 03/04/2025

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான புதிய வரி விகிதம் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. கம்போடியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 49 சதவிகித பரஸ்பர வரி விதிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34 சதவிகித பரஸ்பர வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி பொருட்களுக்கு 20 சதவிகித வரி மற்றும் ஜப்பான் பொருட்களுக்கு 22 சதவிகித இறக்குமதி வரி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி அறிவித்துள்ளார்.
அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த புதிய பரஸ்பர வரிகளில் தங்கத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் மருந்து பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
- “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்