சினிமா
“புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?” ரேஸ் கார் ஓட்டி அசத்திய அஜித் மகன் ஆத்விக்…!

“புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?” ரேஸ் கார் ஓட்டி அசத்திய அஜித் மகன் ஆத்விக்…!
முன்னணி நடிகர் அஜித் சினிமா மாத்திரமின்றி விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் நடிப்பதை விட கார் ரேஸிங் செய்வதில் ஈடுபாடு காட்டி வருகின்றார். அண்மையில் துபாயில் இடம்பெற்ற 24 மணி நேர கார் ரெஸிங்கில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு மூன்றாம் இடத்தினை பிடித்தார்.மற்றும் மீண்டும் இவர் கார் ரேசிங்கில் தனது கவனத்தை செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவருக்கு மனைவி ஷாலினி பெரிய ஒரு துணையாக இருப்பதுடன் பிள்ளைகளும் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதித்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது அஜித் மகன் கார் ரேஸிங் செய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் “புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ” என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அஜித் நடிப்பில் அடுத்து “குட் பேட் அக்லி ” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன