பொழுதுபோக்கு
மனைவி பிறந்த நாள்: கழிந்த சட்டையுடன் வரும் கணவன்; மாமனார் செய்த சூழ்ச்சி!

மனைவி பிறந்த நாள்: கழிந்த சட்டையுடன் வரும் கணவன்; மாமனார் செய்த சூழ்ச்சி!
சந்திரகலா செய்யும் சூழ்ச்சி.. கார்த்திக்கு உருவாகும் சந்தேகம் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி சடங்கு சம்பிரதாயங்களில் பங்கேற்காமல் உள்ளே சென்ற நிலையில் இன்று, சந்திரகலா ரேவதியிடம் உன் வாழ்க்கை இப்படி ஆகிருச்சே.. அந்த ட்ரைவர் திட்டம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிட்டான் என்று ஏற்றி விடுகிறாள். இந்த சமயத்தில் சாமுண்டீஸ்வரி உள்ளே வந்து கல்யாணமாகி வீட்டிற்கு வந்திருக்க வா விளக்கேற்று என்று கூப்பிட ரேவதி முடியாது என மறுக்கிறாள்.அடுத்து சாமுண்டீஸ்வரி எமோஷனலாக பேச ரேவதி இப்போ என்ன விளக்கேற்றனும் அவ்வளவு தானே என்று சொல்லி விளக்கேற்றுகிறாள். தொடர்ந்து மறுபக்கம் கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மகேஷ்க்கு என்னதான் ஆச்சு என்று விசாரிக்க ராஜராஜன் சாமுண்டீஸ்வரிக்கு ஏற்கனவே மகேஷ் பற்றி தெரிந்திருக்கு.. அவ உன்னை தான் மாப்பிள்ளையாக்க போறதா சொன்னா, அதனால் தான் நான் அமைதியாக இருந்துட்டேன் என்று சொல்கிறார். அப்போ சாமுண்டீஸ்வரி மகேஷை கடத்தி இருக்கலாம் என கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சந்தேகப்படுகின்றனர்.இதையடுத்து சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிக்க ஜோதிடர் வீட்டிற்கு வர சந்திரகலா ட்ரைவர் தான் ஜோதிடரை கூட்டிட்டு வந்திருப்பதாக சொல்லி ஏற்றி விடுகிறாள். இதனால் ரேவதி கார்த்தியிடம் சத்தம் போட சாமுண்டீஸ்வரி நான் தான் ஜோசியரை வர சொன்னேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோபத்தில் மகேஷ், துளசி.. வெற்றி சமாளிக்கப்போவது எப்படி? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி நாடகமாடுவது அறிந்து துளசி கோபப்பட்ட நிலையில் இன்று, துளசி வெற்றியை பிடித்து திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். இதனை தொடர்ந்து இங்கே காலேஜில் அஞ்சலி வெளியே வரும் போது அவளது நண்பன் ஒருவன் பார்க்கிறான். அவன் அஞ்சலிக்கு கை கொடுத்து பேச தூரத்தில் இருந்து இதை பார்த்த மகேஷ் கோபப்படுகிறான், என் பொண்டாட்டி மேல நீ எப்படி கை வைக்கலாம் என ஆவேசப்படுகிறான்.உடனே யாருக்கும் தெரியாமல் மேலே சென்று அந்த பையன் தலையில் பூ தொட்டியை தள்ளி விட்டு தனது கோபத்தை தணித்து கொள்கிறான். அடுத்ததாக துளசி வெற்றிக்கு போன் செய்து நீங்க அவனை அடிச்சதா தானே சொன்னீங்க, ஆனால் அவன் நடிச்சிட்டு இருக்கான் என்று சொல்கிறாள். வெற்றி நான் லைட்டாக தான் தட்டினேன், அவன் உங்ககிட்ட இப்படி நடிக்கிறான் என்றால் அவனுக்கு உங்கள பிடிச்சிருக்குனு நினைக்கிறேன் என்று சொல்கிறான்.அடுத்து பாலமுருகன் கடையில் இருக்க அங்கு வந்த ஒருவர் போனில் பேசி கொண்டே வேறுபக்கம் பார்த்து பூஜை செட் ஒன்று கேட்க அது முருகனுக்கு புரியாமல் இருக்கிறது. அந்த நபர் திரும்ப திரும்ப கேட்டு முருகன் எடுத்து கொடுக்கும் போது அந்த நபரை கை தட்டி கூப்பிட்டு கொடுக்க அந்த நபர் ஏன் வாயை துறந்து பேச மாட்டியா என்று அடித்து விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சௌந்தரபாண்டி செய்த சதி.. கிழிந்த சட்டையுடன் ஷாக் கொடுக்கும் சண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் தங்கைகள் கொடுத்த ஐடியாவை தொடர்ந்து செயின் வாங்க சென்ற நிலையில் இன்று, சண்முகம் கடைக்கு வந்து செயின் பார்த்து கொண்டிருக்க சௌந்தரபாண்டி அவன் செயினுடன் வீட்டிற்கு வர கூடாது என ஏற்பாடு செய்கிறார். இதையடுத்து இங்கே பரணியின் பிரிந்த நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன.சௌந்தரபாண்டி எப்படியும் அந்த சண்முகம் செயினுடன் வர போவதில்லை என ஆனந்தத்தில் திளைக்கிறார். பரணி எல்லாரும் இருந்தும் சண்முகம் தன்னுடன் இல்லையே என வருந்துகிறாள். அவன் எதுவும் வாங்கி தர தேவையில்லை என் கூட இருக்கலாம்ல.. இதுவே அவன் தங்கச்சிங்க பிறந்த நாளா இருந்தா இப்படி பண்ணுவானா என கலங்குகிறாள்.சௌந்தரபாண்டி எப்பவும் பெத்தவங்க தான் கூட இருப்பாங்க என ஏற்றி விடுகிறார். மறுபக்கம் சண்முகம் செயினில் ஒரு பக்கம் சண்முகம் போட்டோ இன்னொரு பக்கம் பரணி போட்டோவை பதித்து வாங்கி வருகிறான். வரும் வழியில் ரவுடிகள் சண்முகத்திடம் சண்டையிட்டு ஜெயினை பறிக்க முயற்சிக்கின்றனர். இங்கே எல்லாரும் காத்துக்கொண்டிருக்க சண்முகம் கிழிந்த சட்டையுடன் வந்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.