இலங்கை
மற்றுமொரு சிறப்பு விசாரணையை ஆரம்பித்த சிஐடி; சிக்கவுள்ள 22 பேர்!

மற்றுமொரு சிறப்பு விசாரணையை ஆரம்பித்த சிஐடி; சிக்கவுள்ள 22 பேர்!
ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் B அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் 22 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்திய நபர்களில் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.