இந்தியா
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; புதுச்சேரியில் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இன்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்த இமெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சில மணி நேரங்களில் இது வெடிக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.உடனடியாக இதுகுறித்து அருகில் உள்ள தன்வந்தரி நகர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆட்சியர் அலுவலக கதவை மூடி சோதனையிட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.தீயணைப்பு வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணி நேரத்துக்கு மேலாக சோதனையிட்டனர். சோதனையில் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது உறுதி செய்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து தடை நீக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.