இலங்கை
முல்லைத்தீவு குடும்ப பெண் மீது தாக்குதல்; நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு குடும்ப பெண் மீது தாக்குதல்; நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் சின்ன சாலம்பன் பகுதியில் பெண் ஒருவரை தாக்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டி சுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தனது மனைவியைத் திட்டியதாக் கூறி பேரூந்தில் சென்ற பெண்னை வழிமறித்துப் போதையில் ஆசாமி கடுமையாக தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில் பெண்ணை கடுமையாகத் தாக்கிய நபரைக் கைது செய்யக்கோரி நேற்று வேடிக்கை பார்த்தவர்களும் அவ்வூர் மக்களும் தற்ப்போது ஆர்ப்பாட்டம் மேற்கொள்கிறார்கள்.
சம்பவத்தில் DASH கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராக பணிபுரியும் பெண் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது