Connect with us

இலங்கை

யாழ்.தையிட்டி விகாரை தொடர்பான கலந்துரையாடல் ; பின் கதவால் வெளியேறிய நீதி அமைச்சர்

Published

on

Loading

யாழ்.தையிட்டி விகாரை தொடர்பான கலந்துரையாடல் ; பின் கதவால் வெளியேறிய நீதி அமைச்சர்

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் இன்று நாக விகாரையில் இடம்பெற்றது.

Advertisement

குறித்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்ட அதேவேளை, தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகப் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட சர்வமதப் பேரவைப் பிரதிநிகள் தையிட்டி காணி உரிமையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளியே வந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் மாற்றுப் பாதை வழியாக வெளியேறிச் சென்றனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், குறித்த விவகாரத்துக்கு சுமுகமான ஓர் தீர்வை வழங்குவதற்கு தாம் முனைப்புக் காட்டும்போதும், தேர்தல் காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களில் தம் ஈடுபடுவது பொருத்தமற்றது எனக் கூறி வெளியேறியுள்ளதாக கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திருவரங்கன், குறித்த விவகாரத்தில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முனைப்புடன் இருக்கிறது என்பதே தமக்குள் இருக்கும் கேள்வி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் விவகாரத்தய் காரணம் காட்டி அமைச்சர்கள் வெளியேறினாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலகுவாக தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னை இது என்பதுடன், நீதி யார் பக்கம் என்பது தொடர்பான தெளிவு அனைவருக்கும் உண்டு. எனினும் குறித்த விவகாரத்துக்கான தீர்வை எட்டுவதற்கான முன்முனைப்பை முன்வைக்க அவர்கள் தயங்குகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இந்த தயக்கம் தொடருமா இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.

Advertisement

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த தயக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பான விரிவான காணொளியை இங்கு காணலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன