பொழுதுபோக்கு
ரெடின் கிங்ஸ்லிக்கு பொண்ணு பிறந்தாச்சு… மகளுடன் கியூட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பதிவு

ரெடின் கிங்ஸ்லிக்கு பொண்ணு பிறந்தாச்சு… மகளுடன் கியூட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பதிவு
நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் இணைந்து தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ரசிகர்கள் பலர் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த 2023ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இவர்களின் வளைகாப்பு விழா சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளத்திலும் பரவியது. இந்நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான சங்கீதாவும் இணைந்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ரெடின் கிங்ஸ்கி தனது கையில் தனது மகளை வைத்துக் கொண்டு உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். A post shared by Sangeetha.V🦋 (@sangeetha.v.official)