சினிமா
வடிவேலுக்கு 1 கோடி அட்வான்ஸ் கொடுத்து இருக்க..இறங்கி வரணும்!! பிரபல நடிகர்..

வடிவேலுக்கு 1 கோடி அட்வான்ஸ் கொடுத்து இருக்க..இறங்கி வரணும்!! பிரபல நடிகர்..
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே என அழைக்கபடும் ராதா கிருஷ்ணன், பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர். வடிவேலு பல ஆண்டுகள் கழித்து காமெடி ரோலில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் கேங்கர்ஸ் படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் அவர் அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், வடிவேலு குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில், தன்னுடைய படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு அட்வான்ஸ் தொகையாக முன்பு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறேன்.வடிவேலு கொஞ்சம் இறங்கி வந்து என்னுடைய படத்தில் காமெடி நடிகராக நடித்தால் நன்றாக இருக்கும். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது என்று ராதா கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.