இலங்கை
வயிற்றோட்டம் ஏற்பட்டு பச்சிளம் சிசு உயிரிழப்பு!

வயிற்றோட்டம் ஏற்பட்டு பச்சிளம் சிசு உயிரிழப்பு!
பிறந்து 43 நாள்களான பெண் சிசுவொன்று வயிற்றோட்டம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இளவாலை – உயரப்புலம் பகுதியில் நேற்று இந்தத் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி தாயொருவருக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளில் ஆண்சிசு தெல்லிப்பழை மருத்துவமனையில் (கண்ணாடிப்பெட்டி) வைத்துப் பராமரிக்கப்படுகின்றது. பெண் சிசு தாயாருடன் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தாயார் இடையிடையே மருத்துவமனைக்குச் சென்று ஆண் சிசுவைப் பராமரித்து வருகின்றார்.
இந்த நிலையில், வீட்டிலிருந்த பெண் சிசுவுக்கு நேற்றுப் பால்கொடுத்த பின்னர், அந்தக் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில மணிநேரத்தில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.