
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 03/04/2025 | Edited on 03/04/2025

விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு எதிராக படத்தில் முதலீடு செய்த மும்பையைச் சேர்ந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 27ஆம் தேதி காலை முதல் படம் வெளியாகவில்லை. பின்பு அந்த பிரச்சனை அன்று மாலை முதல் திரையிடப்பட்டு வருகிறது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த விக்ரம் இப்படத்தின் முதல் பாகம் மற்றும் 3ஆம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் முதல் பாகத்தில் எனது கதாபாத்திரத்தின் பின்னணி கதை இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்போது கேரளாவில் படத்தின் வரவேற்பு தொடர்பாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.