Connect with us

இலங்கை

22 முன்னாள் அமைச்சர்கள்,எம்.பி.க்கள் மீது சிஐடி விசாரணை!

Published

on

Loading

22 முன்னாள் அமைச்சர்கள்,எம்.பி.க்கள் மீது சிஐடி விசாரணை!

2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

Advertisement

விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் முதற்கட்ட கண்டுபிடிப்புகள், சம்பந்தப்பட்ட நபர்கள் பல்வேறு அளவுகளில் 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாகவும்

இந்த நிதியைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும்

Advertisement

அதன்படி, நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விவரங்களைப் பெறுவதற்கு,கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம் நேற்றைய தினம் சிஐடி அதிகாரிகள் உத்தரவு கோரியிருந்து.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன