விளையாட்டு
KKR vs SRH LIVE Score: வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

KKR vs SRH LIVE Score: வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs SRH LIVE Cricket Score, IPL 2025நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி, ஒன்றில் வெற்றி பெற்றுள்ள ரஹானே தலைமையிலான கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. இதேபோல், 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் 8-வது இடத்தில் இருக்கிறது.இந்த இரு அணிகளுமே கடைசியாக ஆடிய போட்டிகளில் தோல்வியடைந்தன. அந்தத் தோல்வியில் இருந்து மீள கடுமையாக போராடுவார்கள். சொந்த மண்ணில் 2-வது போட்டியை ஆடும் கொல்கத்தா வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த நினைக்கும். அதற்கு முட்டுக்கட்டை போடவே ஐதராபாத் பார்க்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 28 போட்டிகளில், ஐதராபாத் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.